எம்.ஜி.ஆர்-ஐ பற்றியோ, ஜெயலலிதாவை பற்றியோ பேசுமளவிற்கு தான் அவ்வளவு பெரிய ஆளில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தர்மபுரியில் விசிக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், திமுக மதச்சார்பின்மையை கடைபிடிப்பதால் அக்கட்சியோடு கைகோர்ப்பதாகவும், பாஜகவிற்கு உடன்பாடில்லாத இந்த கருத்தை அதிமுக ஏற்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து பேசியது தொடர்பாகவும் விளக்கமளித்தார்.