சென்னை திருவேற்காட்டில் விளையாட்டுத் திடலில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திருவேற்காட்டிற்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள கோலடி ஏரிக்கு அருகே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், ஏரி மாசு படுவதுடன் நிலத்தடி நீரின் தரமும் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்துள்ள அவர், திருவேற்காடு இபி அலுவலகம் அருகே, கூவம் நதிக்கரை ஓரமுள்ள அரசுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தலாம் என அன்புமணி யோசனை தெரிவித்துள்ளார்.