நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை தடுக்கவில்லை, ஒத்திவைப்பை மட்டுமே கோருவதாக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைப்பதன் மூலம் தமிழ்நாட்டை தண்டிப்பது நியாயமா என்று கேள்வி எழுப்பிய அவர், அதன் அளவுகோலை ஏற்க முடியாது என தெரிவித்தார்.