டெல்லியில் உள்ள தமிழர்கள் குடியிருப்பு தொடர்பாக நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுத்தியுள்ளார். முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தை திமுக நாடாளுமன்ற மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, ரேகா குப்தாவை நேரில் சந்தித்து வழங்கினார். அந்த கடிதத்தில், டெல்லியில் வசித்து வரும் 370 தமிழ் குடும்பங்களுக்கும் வீடு வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய போக்குவரத்து வசதியை செய்து கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தமிழர்களுக்கான வாழ்வாதரத்தை காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டெல்லி அரசு அங்குள்ள தமிழர்களுக்கு பயிற்றுவிக்கும் விதமாக பள்ளியில் தமிழ் மொழி பாடப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.