மக்களின் வீடு தேடி அரசு தற்போது போகிறது என்றும், இவ்வளவு நாள் அரசு யாரை தேடி போனது? என உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சட்டமன்ற தேர்தல் வரும் போது தோண்டப்பட்ட குழிகள் மூடப்படும் என்றும், சாலைகள் பளிச்சிடும் எனவும் கிண்டலாக தெரிவித்தார்.