பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றி இருக்க வேண்டிய அரசு எல்லா வகையிலும் கடமை தவறிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். ரயில் விபத்து நடைபெற்ற செம்மங்குப்பத்தில் சுரங்கபாதை அமைக்க கடந்த ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்காதது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியாதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.