100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக மாற்றி தருகிறேன் என்று கூறி மக்களிடம் வாக்குகளை பெற்று திமுக அரசு ஏமாற்று வேலை செய்து விட்டதாக எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். விழுப்புரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஏரி வேலை பணியாளர்களுக்கான கூலியை திமுக அரசு பெற்றுத் தரவில்லை என்று விமர்சனம் செய்தார்.