மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவில் ஆளுநர் ஒரு தபால்காரர் என தெரிவித்ததாக முதலமைச்சரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். பழனி முருகன் கோவிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் என்றும், ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல என்றும் தெரிவித்துள்ளார்.