போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 47 பேருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் ஆஜரான நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 2,202 பேரில் 100 பேர் வீதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், நகல்கள் வழங்கி முடித்த பிறகு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என தெரிவித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை அக்டோபர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\