அதிமுக திராவிட கட்சி என்ற அந்தஸ்தை இழந்து பல காலம் ஆகிவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக என்ன எழுதி கொடுக்கிறதோ அதை பேசி, ஆர்எஸ்எஸ் சொல்வதை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவை பழித்துப் பேசியவர்களுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறினார்.