வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினத்தைப் போற்றி மகிழ்வோம் என தமிழ்நாடு தினத்திற்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார் எனவும், இதனை தனது இதயத்தில் தாங்கிய பேரறிஞர் அண்ணா, ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என பெயர் சூட்டினார் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களை இன்னாளில் நினைவுகூர்வோம் என த.வெ.க. தலைவர் கூறியுள்ளார்.