உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதுதான் ஊடக தர்மமா? என புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழிசை துணைநிலை ஆளுநராக இருந்தபோது, அவருக்கு 2.99 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டிருந்தது.இதுகுறித்த தனது எக்ஸ் பதிவில், தகவல் அறியும் உரிமை சட்ட பதிவில், முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆடைக்கென தனியாக எதுவும் செலவு செய்யப்படவில்லை எனவும், உதவியாளராக யாரும் நியமிக்கப்படவில்லை எனவும், இச்செயலகத்தால் தனிப்பட்ட முறையிலான செலவு ஏதும் செய்யப்படவில்லை எனவும் தெளிவாக கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.