ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்ட ஐந்தாம் நாளில் இதுவரை திமுகவில் 31 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார இயக்கத்தின் மூலம் வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்க்கும் பணி திமுக சார்பில் நடைபெற்று வருகிறது.