திருப்பதி லட்டு விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் யூ- டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆந்திரா போலீஸ் டிஜிபியிடம் தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி புகாரளித்துள்ளார். மத அடிப்படையில் இரு தரப்புக்கு இடையே மோதலை தூண்டியதாக, பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.