சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ் ஓஹய், அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வு, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் 471 நாட்களுக்குப் பின் அவருக்கு நிவாரணம் கிடைத்தது.