செயல்படாத முதலமைச்சரின் திடீர் ஞானோதயம்தான் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்தார். கடந்த 4 வருடமாக நடந்த நிர்வாக திறமையின்மை, ஊழல்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு இதையெல்லாம் மறைக்கத்தான் இந்த முகாம் திட்டத்தை முதல்வர் தொடங்கி இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.