போராட்டம் தொடர்வதை தாங்கி கொள்ள முடியாத 'கார்ப்பரேட்களின் நண்பன்' ஸ்டாலின் அதிகாரத்தை பயன்படுத்தி அடக்குமுறை செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். இதுகுறித்த எக்ஸ் பதிவில், போராடுபவர்களை அழைத்து பேசாமல் போலியானவர்களை அழைத்து பேசிவிட்டு போராட்டம் முடிந்து விட்டதாக கூறுவது நியாயமா என கேள்வி எழுப்பி உள்ளார்.