கேமராக்களுக்கு முன்னால் மட்டும் ஏன் உங்கள் ரத்தம் கொதிக்கிறது என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, தனது ரத்தம் கொதிப்பதாகவும், தனது நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, சூடான சிந்தூர் தான் ஓடுகிறது எனவும் கூறினார். இந்நிலையில், வெற்று பேச்சுகளை நிறுத்துங்கள் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மேலும், பயங்கரவாதம் தொடர்பான பாகிஸ்தானின் அறிக்கையை ஏன் நம்பினீர்கள் என்றும், டிரம்புக்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள் எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.