காங்கிரஸ் கட்சி மீது அமலாக்கதுறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை பாஜக அரசு ஏவி விடுவதாக திமுக பொருளாளரும் மக்களவை உறுப்பினருமான டி.ஆர். பாலு தெரிவித்தார். பலிவாங்கும் நடவடிக்கையாக நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதற்கு திமுக சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.