தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய அழைத்ததற்காக நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தாம் யாருடனும் கூட்டணி வைக்க போவதில்லை என அறிவித்துள்ளார். சென்னை கேகே நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 5- வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான் என்றார்.