பாஜகவிற்கு அதிமுக A -டீம் என்றால், திமுக B-டீம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக ஆளும் மாநில முதல்வரை கூட சந்திக்க நேரம் கொடுக்காத பிரதமர், தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரை மட்டும் சந்திக்க நேரம் கொடுப்பதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.