திடீரென அம்பியாகவும், பின்னர் அந்நியனாகவும் மாறுபவர் சீமான் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் விஜய் குறித்த சீமான் விமர்சனம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழ்த்தேசியமும் திராவிடமும் இரண்டும் ஒன்று தான் என்றார்.