போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் நிறுவன தொழிலாளர்களில் ஒரு தரப்பினர் பணிக்கு திரும்ப உள்ளதாகவும், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தை தொடர உள்ளதாகவும் கூறப்படுகிறது. தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டிஆர்பி ராஜா, சி.வி.கணேசன் ஆகியோர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் 14 கோரிக்கைகளுக்கு உடன்பாடு எட்டப்பட்டது.