ராமதாஸ், அன்புமணி இருவரும் ஒன்றுதான், பிரித்து விடாதீர்கள் என சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் கண்ணீருடன் வேண்டுகோள் வைத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணிக்கு இடையிலான உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், அக்கட்சி எம்எல்ஏ அருளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில், அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், தான் 35 வருடங்களாக பாமகவிற்கு உழைத்ததாகவும், 18 முறை சிறைக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். தன்னையும், தனது உழைப்பையும், தியாகத்தையும் குறை சொல்பவர்கள் ஆதாரத்துடன் நேரில் விவாதிக்க வரலாம் என அவர் சவால் விடுத்துள்ளார்.இதையும் படியுங்கள் : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது புகாரளித்த ஆர்.பி. உதயகுமார்..