முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எக்ஸ் தளத்தில் பலாத்காரம் என்பதிற்கு பதிலாக பலத்த காரம் என பதிவிட்டது சர்ச்சையான நிலையில், அதனை எக்ஸ் தளத்திலிருந்து அகற்றினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக மகளிர் அணி சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த ஆர்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், அரசை விமர்சித்தும் செல்லூர் ராஜு பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பலத்த காரம், கற்பழிப்பு" என குறிப்பிட்டர். இந்நிலையில், பலாத்காரம் என்பதற்கு பதிலாக அவர் பலத்த காரம் என பதிவிட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.