ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல் போக்கு குறித்த கேள்விக்கு நீர் அடித்து நீர் விலகாது என ஒற்றைவரியில் திருமாவளவன் பதிலளித்தார். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணியை பார்த்து பயமில்லை என்றால் எதற்காக ஒரு வருடத்திற்கு முன்பே இபிஎஸ் பிரச்சாரத்தை துவக்கியிருக்கிறார் என வினவினார்.