மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலைதான் ராகுல் காந்திக்கும் ஏற்படும் என பாஜக தலைவர் ஒருவர் மிரட்டியதாகவும், ராகுலின் நாக்கை அறுத்தால் பரிசு என ஷிண்டே பிரிவு சிவசேனா எம்.எல்.ஏ ஒருவர் அறிவித்ததாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ள முதலமைச்சர், சகோதரர் ராகுலுக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவு பலரையும் ஆட்டம் காண செய்திருப்பதாகவும், அதுவே இதுபோன்ற மிரட்டல்களுக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு, மிரட்டல் மற்றும் வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.