மன்னர் காலத்தில் அந்தபுரத்து பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என கூறி, நடிகை கஸ்தூரி சர்ச்சையை கிளப்பியுள்ளார். சென்னை எழும்பூரில் பிராமணர்களுக்கு எதிரான அவதூறுகளை கண்டிக்கும் போராட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், திராவிடியம் பேசக் கூடியவர்களுக்கு கடவுள் மறுப்பை சார்ந்தது தான் பிரமாண எதிர்ப்பு என்பதால் அவர்கள் பிராமணர்களை எதிர்ப்பதாகக் கூறினார்.