பிரதமர் மோடியின் பருப்பு தமிழ்நாட்டில் என்றும் வேகாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். திமுக பவள விழாவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 75 வயது நிரம்பிய கட்சியினருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது நேரில் வராத பிரதமர் மோடி, மக்களவை தேர்தல் அறிவித்தபோது 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்ததாக தெரிவித்தார். கடந்த மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு 3 காரணங்களை பட்டியலிட்டவர், அதில் முதல் காரணம் பிரதமர் மோடி என்றார். அவரது பருப்பு வடநாட்டில் வெந்திருக்கலாம்; ஆனால் தமிழ்நாட்டில் என்றும் வேகாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.