மக்களை ஏமாற்றி, மலிவான விளம்பர அரசியலில் பிரதமர் ஈடுபடுவதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்துள்ளார். வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக காங்கிரசை விமர்சித்த மோடிக்கு பதிலடி தந்துள்ள கார்கே, பிஜேபி என்ற வார்த்தையில் உள்ள B என்றால் Betrayal அதாவது துரோகம் என்றும், J என்றால் Jumla அதாவது வெற்று வாக்குறுதிகள் என்றும் கடுமையாக சாடியுள்ளார். மாநில தேர்தல்களில் பாஜக அளிக்கும் 100 நாட்கள் வாக்குறுதி திட்டம் வெற்று விளம்பரம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.