அந்நிய மண்ணில் இருந்து கொண்டு சொந்த நாட்டை அவமதித்தவர்களுக்கு ஹரியானா மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சாதி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் காங்கிரசை ஹரியானா மக்கள் நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.