தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகம் அதிக கட்டணத்தில் பட்டப்படிப்புகளை நடத்துவதை தடை செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய மாணவர் சேர்க்கை, கட்டணக் கொள்ளை ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அன்புமணி, பெரியார் பல்கலைக்கழகமும், தனியார் நிறுவனங்களும் இணைந்து நடத்தும் பல்வேறு படிப்புகளில் சேர்ந்து எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம் என்று தமிழக அரசும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.