பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்ற முயற்சிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். வரும் 8ஆம் தேதி சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தப்போவதாக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அறிவித்துள்ள நிலையில், 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பணி நிரந்தரம் செய்யப்பட்டால், 12 ஆயிரத்திற்கும் மேலான குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.