பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து பழைய வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது என்ற உத்தரவை டெல்லி அரசு நிறுத்தி வைத்துள்ளது. 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகால பெட்ரோல் வாகனங்களுக்கு டெல்லி மற்றும் தேசிய தலைநகர் ஆட்சி பகுதிகளில் எரிபொருள் நிரப்பப்பட மாட்டாது என அறிவித்த டெல்லி அரசு அதை கடந்த ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தியது. அதையும் மீறி வந்த விலையுயர்ந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசு வாகன யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இதை ரத்து செய்து விட்டு வேறு மாதிரியான கட்டுப்பாட்டை கொண்டு வர டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.