ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே பூமிதான நிலத்தில், சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மேல்நிலை தொட்டியின் மீது ஏறி நின்று சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு பூமி தான நிலத்தில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என வடுகப்பட்டி பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.