அதிமுக பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, தங்களது குருதியிலும் குடியிருக்கும் பேரறிஞர் அண்ணாவை ஒருநாள், ஒரு நொடி கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில், 4 ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு, அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுவதாகவும், அதிமுகவை பற்றியே புலம்பிக் கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார். திமுக-வால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் தாம் மீட்டுத் தருவதாக தெரிவித்தவர், இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு தாம் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி என குறிப்பிட்டுள்ளார்.இதையும் படியுங்கள் : பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல்..