மத்திய அரசு நிதி வரவில்லை என காரணம் கூறி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது என இபிஎஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கார் பந்தயத்திற்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்த திமுக அரசு, மாநில அரசின் நிதியிலிருந்து சுமார் 32,500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.