அதிமுகவுடனான கூட்டணி குறித்து தேவையற்ற கருத்துகளை யாரும் பேச வேண்டாம் என நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்டுப்பாடு விதித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், திமுகவை வீழ்த்துவதை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டு உழைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.