திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றி விடுவோம் என கூறி பதவி பெற்ற நயினார் நாகேந்திரன், அதற்கு முன்பு தங்களிடம் என்னவெல்லாம் பேசினார் தெரியுமா? என்றும் அதையெல்லாம் பொதுவெளியில் சொல்ல முடியாது என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார். நெல்லை பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக-பாஜக கூட்டணி பஞ்சாயத்துகளை முடித்துவிட்டு பிறகு திமுகவை பற்றி பேசலாம் என கூறினார்.இதையும் படியுங்கள் : "திருச்செந்தூர் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும்"