மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முட்டாள் என்று பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் பாதுகாப்பை முழுவதுமாக திமுக அடகு வைத்து விட்டதாகவும், இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டின் பாதுகாப்பை மொத்தமாகக் கட்டிக் காக்கும் மத்திய உள்துறை அமைச்சரைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? எனவும் கேள்வி எழுப்பியுள்ள அவர், மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை என தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : 1975இல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட தினம்..