நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2016-ல் முதல் கடந்த 9 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துள்ளதாக கூறியுள்ள பூபாலன், இது நாள் வரை செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொருட்படுத்தவில்லை என்றும், கட்சியில் தனக்கு உரிய மரியதை கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2026 தேர்தலுக்கு இப்போதே முகம் தெரியாத வேட்பாளரை அறிவித்த அதிருப்தியில், அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.