மோடியை கேள்வி கேட்காமல் தமிழக முதலமைச்சரை ஏன் கேள்வி கேட்கின்றனர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பேசிய அவர், அதானியை தனி விமானத்தில் அழைத்துச் சென்று 6 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்த மோடிதான் முதல் குற்றவாளி என்றார்.