வரும் சட்டப்பேரவை தேர்தலில் தம்முடன் இருப்பவர்களுக்கு தான் சீட் கொடுக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கறாராக கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நல்லக் கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றிக் கூட்டணியை அமைக்கப் போவதாக தெரிவித்தார். தம்முடன் இங்கு இருப்பவர்கள்தான் எதிர்கால சட்டமன்ற உறுப்பினர் என்றவர், தமக்கு எல்லா அதிகாரமும் உள்ளதாகவும், கட்சியின் தலைவராக பொறுப்பேற்று நல்லவர்கள் மற்றும் வல்லவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கப்போவதாக ராமதாஸ் கூறினார்.இதையும் படியுங்கள் : அமெரிக்கா வரை சென்று தாக்க கூடிய ஏவுகணை.. அணு ஆயுத பாலிஸ்டிக் ஏவுகணையை தயாரிக்கும் பாக்.