தமிழிசை சௌந்தரராஜனின் கவிதையில் மக்கள் ஏமாறாமல் இருப்பதால்தான், அவர் ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியை சந்தித்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னையில் வில்லிவாக்கம், கொளத்தூர் தொகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, அண்ணாநகரில் அன்னம் தரும் அமுதக் கரங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிறகு செய்தியாளரை சந்தித்த அவர், பாஜகவில் யாருக்கு செல்வாக்கு என்பதை காட்ட அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் தமிழிசை சௌந்தரராஜன் இடையே போட்டி நிலவுவதால், தான் செல்வாக்கு பெற்றவர் என்பதை காட்டுவதற்காக தமிழிசை பேசி வருவதாக தெரிவித்தார்.