பெற்ற தாய், தந்தையை மறந்து, பாசத்தை மறந்தவர் கறையை பற்றி எல்லாம் பேசலாமா என பாமக தலைவர் அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் வேம்பாக்கம் அருகே சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் பேருந்து நிலையம் முழு பயன்பாட்டிற்கு வரும் என தகவல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, திருப்புவனம் இளைஞர் காவல் மரணத்தால் திமுக அரசின் கையில் ரத்தக்கறை படிந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சனம் குறித்த கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.