மதுரை மாநகராட்சி சொத்துவரியில் 200 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக கூறி, சிபிஐ விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,மதுரை மாநகராட்சி கட்டங்களுக்கு சொத்துவரியை நிர்ணயம் செய்வதில் 200 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டிய தமிழக அரசு அதனை மூடி மறைக்க முயற்சிப்பது கண்டிக்கதக்கது என கூறியுள்ளார். திமுக அரசின் காவல்துறை இந்த வழக்கை விசாரித்தால் குற்றவாளிகள் தப்ப நேரிடும் என்றும், இதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை மாநராட்சியை கலைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.