உள்ளாட்சிகளில் சமூக நீதியை நிலைநிறுத்த முடியாத திமுகவுக்கு சமூக நீதி குறித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை என பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக பணியாற்றி வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினர் பூங்கோதை சசிகுமார் சாதி ரீதியான அடக்குமுறைகள் காரணமாக பதவி விலகியிருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். மேலும் திமுகவின் ஒன்றியப் பெருந்தலைவருக்கு, அதே கட்சியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் ஒருவரால் இழைக்கப்படும் சமூக அநீதியை சரி செய்ய முடியாத திமுக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் எவ்வாறு சமூகநீதி வழங்கப் போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.