ஆக்கப்பூர்வமான அரசியலை கையிலெடுத்து 2026 ஆம் ஆண்டில் இலக்கை அடைவோம் என தமிழக வெற்றி கழகத்தலைவர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழக மாநாட்டினை வெற்றிப்பெற செய்த தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடித முறை என்பது பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம் என்றும், இது நம் அனைவருக்கும் சொந்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆற்றிய பணி அளப்பரியது என குறிப்பிட்டுள்ள விஜய், தமிழக வெற்றி கழகத்தை நோக்கி இன்னும் விமர்சனங்கள் அதிகமாக வரும் என்றும், தேவையில்லாத கருத்துகளை மறந்தும் கூட மனதில் ஏற்ற வேண்டாம் எனவும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.