தியாக தீபமான தந்தையை வணங்குவோம் என்று அன்புமணி ராமதாஸ் தந்தையர் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி என்றும், தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தன்னை அன்புமணி முதுகில் குத்திவிட்டதாக அவரது தந்தையான ராமதாஸ் பொங்கி எழுந்த நிலையில் அன்புமணி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.