தமிழக அரசின் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி கொச்சைப்படுத்துவதாக, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான போதைப்பொருள் வழக்கிற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்த ஆளுநர், போதைப் பொருட்களுக்கு எதிரான திமுக அரசின் தீவிர நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தலாமா? என வினவியுள்ளார்.